Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 மே 2024 (07:26 IST)
இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்ப்புக்கு மாறாக மிகவும் மோசமாக விளையாடியது. அதனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மாற்றப்பட்டு ஷகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு சில மாதங்களிலேயே அவரும் நீக்கப்பட்டு மீண்டும் பாபரே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அமெரிக்காவில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியத்துவம் காட்டி வருகிறது. இதற்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி வீரர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார். அப்போது கலந்துகொண்ட வீரர்களிடம் “எதைப் பற்றியும் கவலைப் படாதீர்கள், கோப்பையை வென்று வாருங்கள். கோப்பை நமக்குதான். பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 83 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments