Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியில் விளையாட விருப்பம்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (18:15 IST)
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாக குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆடும் முயற்சியில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்துள்ளார்.


 

 
 
ஜினைத் கான் 71 விக்கெட்டுகளுடன் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அவரால் சிறப்பாக பந்து வீச்சுக்கு திரும்ப முடியவில்லை என்று பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹாக் கூறினார்.
 
இதையடுத்து ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாக குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆடும் முயற்சியில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜுனைத் கான் கூறியதாவது:-
 
நான் முழு உடற்தகுதியுடன் தான் ஆடி வருகிறேன். வழக்கமான பயிற்சிகள் அனைத்திலும் ஈடுப்பட்டு வருகிறேன். இருந்தும் ஏன் புறக்கணிக்கப்படுகிறேன் என்று தெரியவில்லை. இதனால் நான் மிகவும் மனமுடைந்து உள்ளேன், என்றார்.
 
மேலும் ஜுனைத் கான் ஏற்கனவே இங்கிலிஷ் கவுண்டியில் மிடில்கிளாஸ் அணிகளுக்காக சிறப்பாக ஆடியதால், திறமை மதிக்கப்படும் இடத்துக்குச் செல்வதே சிறந்தது என்று இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார்.. பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி… இங்கிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு!

முதுகு வீக்கம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டிகளை தவறவிடும் பும்ரா!

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments