Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீக் போட்டிகளில் விளையாட நவீன் உல் ஹக்குக்கு 20 மாதம் தடை… பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:36 IST)
கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அவரும் பதிலுக்கு விராட் கோலியை ட்ரோல் செய்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியிலும் நவீன் உல் ஹக் பந்துவீசும் போதும் பேட் செய்யும் போதும் கோலி கோலி என ரசிகர்கள் கத்தினர். ஆனால் கத்தவேண்டாம் என கோலி ரசிகர்களை நோக்கி சைகை செய்தார். இதையடுத்து இருவரும் கைகொடுத்து சமாதானம் ஆனார்கள். அதன் பின்னர் ரசிகர்களும் நவீன் உல் ஹக்கை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.

இந்நிலையில் இண்டர்நேஷனல் டி 20 லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் ஷார்ஜா வாரியர்ஸ் என்ற அணிக்காக விளையாடி வருகின்றார். அந்த அணி நவீன் உல் ஹக்கின் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்த போது அதற்கு நவீன் உல் ஹக் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த ஐஎல்டி 20 லீக் நிர்வாகம், நவீன் உல் ஹக் 20 மாதங்கள் ஐஎல்டி 20 லீக்கில் விளையாட தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments