சிஎஸ்கே என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள்! – தோனி வேதனை!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (11:33 IST)
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடன் சிஎஸ்கே தோல்வியடைந்தது குறித்து மகேந்திர சிங் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ப்ளே ஆப்க்கு சிஎஸ்கே செல்லுமா என ரசிகர்களிடையே பதற்றம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள் விழுந்துள்ளது. அதில் ஒரு ஓட்டையை அடைத்தால் மற்றொரு ஓட்டை உருவாகி விடுகிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments