அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (07:05 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

பல ஆண்டுக் கனவான உலகக் கோப்பையை கையில் ஏந்தும் போது வித்தியாசமாக ஸ்டைலில் நடந்து வந்து ரோஹித் அந்த கோப்பையை வாங்கினார். அந்த நடை இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி உடன் இந்திய அணி வீரர்கள் கலந்துரையாடல் செய்தனர்.

அப்போது மோடி “அப்படி நடக்க சொல்லி ஐடியா கொடுத்தது சஹால்தானே?” எனக் கேட்டார். அதற்கு ரோஹித் ஷர்மா சிரித்துக் கொண்டே “சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும்தான்” என பதிலளித்தார். அதைக் கேட்டு மோடி சிரித்து ரசித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments