Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஹாட்ஸ்பாட் மெல்போர்ன் மைதானம் – போட்டியை பார்த்தவருக்கு கொரோனா!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (12:43 IST)
மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமாக அந்த நாட்டு நாளேடான தெ டெய்லிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் பார்வையாளராக இருந்த 30 வயதுமதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் போட்டிக்கு பின்னர் வணிக மையம் ஒன்றுக்கும் சென்றுள்ளார். அதனால் எங்கு அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக மெல்போர்ன் மைதானத்தின் தி கிரேட் சதர்ன் ஸ்டான்ட்டில் ஜோன் 5-ல் 12.30 மணிமுதல் பிற்பகல் 3.30 வரை போட்டியைப் பார்த்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments