Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ கண்ட்ரோல் பண்ண பாத்தும் முடியல.. 200+ தாண்டிய கொல்கத்தா! – அதிரடி காட்டுமா ஆர்சிபி?

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (17:57 IST)
இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், ஆர்சிபி அணியும் மோதி வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 222 ரன்களை குவித்துள்ளது.



டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்து 4.2வது ஓவரில் பில் சால்ட் (48 ரன்கள்), 52வது ஓவரில் சுனில் நரேன் (10 ரன்கள்), 5.6வது ஓவரில் ரகுவன்சி (3 ரன்) என பவர்ப்ளே முடிவதற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை ஆரம்பமே தன் வசமாக்க தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த கொல்கத்தா ப்ளேயர்கள் குறைந்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்களை அதிகப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயரின் அரைசதம் அதை தொடர்ந்து ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் குவித்த 20+ ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. இதனால் தற்போது 223 என்ற இலக்கோடு களம் இறங்கியுள்ள ஆர்சிபி அணி தற்போதைய நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 2 ஓவருக்கு 27 ரன்கள் என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து விராட் கோலி விக்கெட் இழக்காமல் அடித்து விளையாடினால் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிரடி.. சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி!

நிதீஷ் & சுந்தர் நிதான ஆட்டம்… கௌரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா.. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்!

முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!

நிதிஷ்குமார் & வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த இந்தியா.. !

பும்ராவின் விக்கெட்களை விட ரோஹித் ஷர்மாவின் ரன்கள் கம்மி.. கவலையளிக்கும் ஃபார்ம்!

அடுத்த கட்டுரையில்
Show comments