Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

Webdunia
சனி, 1 ஜூன் 2024 (10:12 IST)
நாளை முதல் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான். அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்ற இந்திய அணி அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்லாமல் இருந்தார். அவர் நேற்றிரவு அமெரிக்கா சென்று அணி வீரர்களுடன் இணைந்துள்ளார்.

ஆனாலும் இன்று நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடியாக அவர் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments