Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனங்களை விலக்கிவைத்துவிட்டு… இதுதான் எனது வேலை –ஆட்டநாயகன் கோலி!

vinoth
திங்கள், 24 பிப்ரவரி 2025 (09:49 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்து பாகிஸ்தான் அணி நிர்னயித்த இலக்கை இந்திய அணி மிக எளிதாக 43 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் முன்பு போல சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கோலியின் நேற்றைய இன்னிங்ஸ் அமைந்தது. ஆட்டநாயகன் விருது பெற்றபின்னர் விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி அவர் பேசியுள்ளார்.

அதில் “விமர்சனங்களை விலக்கி வைத்துவிட்டு, எனது ஆற்றலுக்கு ஏற்றபடி எனது இடத்துக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியமானது. எனது வேலை அணிக்காக விளையாடுவது மட்டுமே.  நான் ஒவ்வொரு பந்திலும் 100 சதவீதத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். எனது வேலை சுழல்பந்து வீச்சாளர்களை சமாளித்து விளையாடுவது என்பதாக இருந்தது. கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் இலக்கை விரைவாக எட்டினோம். இல்லையேல் கடைசி வரை சேஸ் செய்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடடா! என்னவொரு ரியாக்‌ஷன்… ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி வைரலான பாக் வீரர்!

கோலி சதமடிக்கக் கூடாது என்றுதான் பாண்ட்யாவை அனுப்பினாரா கம்பீர்?... ரசிகர்கள் கொந்தளிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டின்னா குஷியாகிடுவாரு?... ரன் மெஷின் கோலி படைத்த வித்தியாசமான சாதனை!

விராட் கோலி ஃபார்ம் அவுட் என சொல்கிறார்கள்… ஆனால் இன்று? – பாகிஸ்தான் கேப்டன் புகழ்ச்சி!

ஒரே பந்தில் இந்தியாவின் வெற்றியும் விராத் கோஹ்லியின் சதமும்.. பாகிஸ்தான் படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments