Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (08:54 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆட இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. இந்த இன்னிங்ஸில் கோலி 17 ரன்கள் சேர்த்திருந்த போது LBW முறையில் ஆட்டமிழந்தார். அவர் தன்னுடைய அவுட்டுக்கு ரிவ்யூ கேட்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால் ரிப்ளேவில் அவர் அடித்த பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடில் பட்டதாக தெரியவந்தது. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தலும் அவர் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய இன்னின்ஸில் அவர் 6 ரன்கள் சேர்த்த போது இந்தியா மண்ணில் 12000 ரன்களை சர்வதேசக் கிரிக்கெட்டில் கடந்துள்ளார். அவருக்கு முன்னர் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments