Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… கபில்தேவ் எச்சரிக்கை!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:52 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் லீக் போட்டிகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த கபில்தேவ் மனதில் பட்டதை தைரியமாக கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் டி 20 போட்டிகள் மற்றும் தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்து வரும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “லீக் போட்டிகள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

அவற்றைக் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு ஐசிசிக்கு உள்ளது. தற்போதைய கிரிக்கெட் ஐரோப்பாவின் கால்பந்து போட்டிகளை போல உள்ளன. கால்பந்து போட்டிகளில் லீக் போட்டிகள் அதிகமாகி சர்வதேச போட்டிகள் என்பதே உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் விளையாடுவது போல கிரிக்கெட்டும் மாறிவிடும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments