Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2015 (13:58 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளார் 34 வயதான மிச்சேல் ஜான்சன் பெர்த்தில் இன்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


 

 
73 டெஸ்டில் விளையாடிய மிச்சேல் ஜான்சன் 311 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர் 239 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
 
டெஸ்டில் 61 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்களை கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஜான்சன், 12 முறை 5 விக்கெட்களுக்கு அதிகமாகவும், 3 முறை 10 விக்கெட்களுக்கு அதிகமாகவும் கைப்பற்றி உள்ளார்.
 
ஒரு நாள் போட்டிகளில் 31 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஜான்சன், 30 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
 
தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ஜான்சன், ”ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாகும். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். எனது கிரிக்கெட் பயணம் நம்ப முடியாத வகையில் இருந்தது. எந்த ஒரு பயணத்துக்கும் முடிவு உண்டு. ஆஸ்திரேலிய அணிக்காக நான் நீண்ட காலம் சிறப்பாக பந்துவீசியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.”

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments