Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பையில் இந்தியா கலந்துகொள்ளுமா? ஐபிஎல் இறுதிப் போட்டியில் முடிவு!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (12:00 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜம் சேத்தி அதிரடியானக் கருத்து ஒன்றை அறிவித்துள்ளார். அதில் “ பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை அனுப்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது” எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பைக்கு இந்தியா செல்லுமா என்பது குறித்து ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்குமன்று முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். இறுதிப் போட்டியைக் காண வரும் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தலைவர்களோடு கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என ஜெய்ஷா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments