Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி கேப்டனாக பொறுபேற்க இதுவே சரியான தருணம் - இயான் சேப்பல் கருத்து

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2014 (09:38 IST)
விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க இதுவே சரியான தருணம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.
 
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதோடு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் (115, 141) சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 

 
மேலும் பல சாதனைகளை அந்த ஆட்டத்தில் அவர் படைத்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து இயான் சேப்பல் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் மூன்றரை நாட்கள் விராட் கோலி செயல்பட்ட விதம், அவர் இந்திய அணியின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை இந்திய தேர்வாளர்களுக்கு உணர்த்தியிருக்கும். 

 
டோனியும் தனது நாட்களில் சிறந்த டெஸ்ட் கேப்டன் தான். எனினும் அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் மாற்றத்திற்கு இதுவே உகந்த நேரமாக தோன்றுகிறது. இந்த போட்டியில் கோலி இந்திய அணியின் தற்காலிக கேப்டன் தான். ஆனால் முழு நேர கேப்டனுக்குரிய திறமையை பார்க்க முடிந்தது” என்றார்.

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

Show comments