Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சச்சின் காலில் விழுந்து வணங்கிய யுவராஜ் சிங்

Webdunia
திங்கள், 9 மே 2016 (18:07 IST)
ஐபிஎல் போட்டியின்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் யுவராஜ் சிங், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.


 
நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பை இண்டியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், சன் ரைசஸ்ர் ஹைதராபாத் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில், 177 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 82 ரன்களும், டேவிட் வார்னர் 48 ரன்களும், யுவராஜ் சிங் 39 ரன்களும் குவித்தனர்.
 
பின்னர் ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக ஹர்பஜன் சிங் 22 ரன்களும், கருணல் பாண்டியா 17 ரன்களும், பொல்லார்ட் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போட்டியின்போது, யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து வணங்கினார். இவ்வாறு யுவராஜ் சிங் நடந்துகொள்வது இது முதன் முறையல்ல.
 
இதற்கு முன்னதாக, 2014ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் சச்சினின் பந்துவீச்சில் யுவராஜ் அவுட் ஆனார். அதில் 134 பந்துகளில் 132 ரன்கள் எடுத்திருந்தார். அவுட் ஆனவுடன் யுவராஜ், சச்சினின் காலில் விழுந்து வணங்கி சென்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments