ஐபிஎல் இறுதிப்போட்டி.! எங்கு தெரியுமா..? வெளியானது அப்டேட்..!!

Senthil Velan
திங்கள், 25 மார்ச் 2024 (18:24 IST)
ஐபிஎல் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான 21 போட்டிகள் கொண்ட முதல் கட்ட ஐபிஎல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில், பிளே ஆப் மற்றும் இறுதி போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின் நடப்பு ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 26ஆம் தேதி
நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் முதலாவது தகுதிச் சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மே 20ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறும் நிலையில், ஒருநாள் இடைவெளியில் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளது.

ALSO READ: மொய் வேண்டாம்..! மோடிக்கு வாக்களியுங்கள்..! வைரலாகும் திருமண பத்திரிகை..!!
 
முதலாவது தகுதிச் சுற்று மே 21ஆம் தேதி மற்றும் வெளியேற்றுதல் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், 2வது தகுதிச் சுற்றுமே 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இறுதியாக மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்