Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடம் ஸம்பா புதிய சாதனை; ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்

Webdunia
புதன், 11 மே 2016 (14:57 IST)
ஐபிஎல் போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஸம்பா சாதனைப் படைத்துள்ளார்.
 

 
நேற்று தோனி தலைமையிலான ரைஸிங் புனே சூப்பர்ஜெய்ண்ட்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 33 ரன்களும், கேன் வில்லியம்சன் 32 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்த போட்டியில், புனே அணியில் அற்புதமாக பந்து வீசிய ஆடம் ஸம்பா, 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும்.
 
இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ஷொஹைல் தன்வீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments