Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

vinoth
சனி, 25 மே 2024 (09:47 IST)
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு உலகக் கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன. இது சம்மந்தமாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தது.

அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விரைவில் உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என பல வீரர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் இந்திய அணி தேர்வை சரியானதாக கணித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணியில் அனுபவமும் அதிரடியும் கலந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் நான்கு ஸ்பின்னர்கள் இருப்பது நல்லதே. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சுழல்பந்து வீச்சுக்கு உதவும். அதே போல இந்திய அணியில் வலது, இடது பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அது உதவியாக இருக்கும். அணியில் நடராஜன் இருந்திருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய மனவலிமை இந்திய அணியிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments