Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை: கவாஸ்கர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2016 (13:20 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி ஒரு போட்டியிலும் கூட வெற்றி பெறவில்லை.


 
 
தொடரை இழந்த நிலையில் நேற்றையை நான்காவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் நடுவரிசை வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவியது.
 
இந்திய வீரர்களின் இந்த மோசமான செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் இந்திய வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
 
ஆஸ்திரேலியா தொடருக்கு பின் இந்திய அணியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக நான் அணியை முற்றிலுமாக மாற்ற சொல்லவில்லை, ஆனால் சில வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்றார்.
 
மேலும் கூறிய அவர், தற்போது அணியில் இருக்கும் சில வீரர்கள் மூன்று, நான்கு முறை ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார்கள் ஆனல் அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அணியில் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் 2019-ல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார் செய்ய முடியும் என்றார்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments