Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (11:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர். இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 185 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி மளமளவென விக்கெட்களை இழந்தது. 7 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் சேர்த்த போது டிக்ளேர் அறிவித்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய போது 8 ரன்கள் சேர்த்திருந்தபோது மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. மழைக் கைகொடுத்ததால் தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு போட்டியை சமனில் முடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்கள்… அப்ப நம்ம நிலைமை?

நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன்… ஆனால் அவர்கள் அற்புதம் செய்துவிட்டார்கள் – கே எல் ராகுல் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments