Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உலகக் கோப்பையில் முதல் போட்டியை விளையாடும் இந்தியா… ப்ளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்?

vinoth
புதன், 5 ஜூன் 2024 (08:40 IST)
டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த எந்த வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் மைதானங்கள் பவுலிங்குக்கு ஏற்றவை என்பதுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்றிரவு இந்திய அணி அயர்லாந்தை தங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இந்திய ப்ளேயிங் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கோலி இறங்குவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

மூன்றாம் இடத்தில் ரிஷப் பண்ட்டைக் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இறங்க, ஐந்தாம் இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ஷிவம் துபே ஆகிய ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஆறு மற்றும் ஏழாவது இடங்களில் ஹர்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் இறங்க, அடுத்தடுத்த இடங்களில் குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments