Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளோம்…” பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல்!

ஆசியக் கோப்பை
Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (10:28 IST)
இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என சூசகமாக சொல்வது  போல அமைந்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments