Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேத்து விட்டதுக்கு இன்றைக்கு சேர்த்து செய்யும் இந்தியா! அபிஷேக் சர்மா அபார சதம்!

Prasanth Karthick
ஞாயிறு, 7 ஜூலை 2024 (17:40 IST)

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடரில் இந்திய அணி நேற்று தோற்ற நிலையில் இன்று ஆரம்பமே அதிரடி காட்டி வருகிறது.
 

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜிம்பாப்வேவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்றைய முதல் போட்டியிலேயே இந்திய அணி ஜிம்பாப்வேவிடம் தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா எப்படி விளையாடுமோ என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனால் டாஸ் வென்று பேட்டிங் எடுத்த இந்திய அணி தங்கள் பவரை காட்டத் தொடங்கியுள்ளனர். ஓப்பனிங் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சுப்மன் கில் 2 ரன்களில் அவுட் ஆனாலும், அபிஷேக் சர்மா நின்று அதிரடி காட்டி வந்தார். தற்போதைய நிலவரப்படி 46 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை அடித்து விளாசிய அபிஷேக் சர்மா அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசி 41 ரன்களில் அரை சதத்தை நெருங்கி வருகிறார்.

இன்று இந்தியாவின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு ஜிம்பாப்வே ஈடு கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments