நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அரங்கேற்றிய சில சாதனை துளிகள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதில் இந்திய அணி 2 டெஸ்டில் தோற்றது. பின்னர் 2 டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட கோலி 692 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். மேலும் அதிகபட்சமாக 169 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் 1 சதம், மற்றும் 4 அரைசதத்துடன் 482 ரன்கள் குவித்தார். ரகானே 1 சதம், 2 அரை சதத்துடன் 399 ரன் எடுத்தார். பந்து வீச்சாளர்களில் ஷமி 15 விக்கெட்டுகளையும், அஸ்வின் 12 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.