Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (15:57 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

இந்நிலையில் அவர் ஏலத்துக்கு வந்தால் அவரை எந்த அணி வாங்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர் லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எல்லாமே ஊகங்களாகவே உள்ளது.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இதுபற்றி பேசும்போது “ரோஹித் மட்டும் ஆர் சி பி அணிக்கு சென்றால், அது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு வந்ததை விட பெரிய நகர்வாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments