Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அறியாத கேப்டன் ரோஹித் சர்மா! – ஐசிசி 20 ஓவர் தரவரிசையில் இந்தியா!

Webdunia
புதன், 4 மே 2022 (15:34 IST)
ஐசிசி சர்வதேச டி 20 போட்டிகளின் ஆண்டு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி நான்காவது இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments