Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

vinoth
புதன், 27 நவம்பர் 2024 (11:05 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது.

பாகிஸ்தான் சார்பாக பேசவேண்டிய ஐசிசி இந்திய அணி மூலமாக வரும் வருவாய்க் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கண்டிக்க அஞ்சுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால் இப்போது வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிடுவதில் தாமதமாகியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தினால் அதற்காக ஊக்கத்தொகை தருவதாக ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி பாகிஸ்தான் அதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

போர் பதற்றம் எதிரொலி; பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments