Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு பந்து வீசுவது கவலையளிக்கும் விஷயம் - வாசிம் அக்ரம் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (17:48 IST)
விராட் கோலிக்கு பந்து வீசுவது கண்டிப்பாக கவலையளிக்கும் விஷயம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
 

 
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அனைத்து வடிவ ஆட்டங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
 
இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி, 15 போட்டிகளில் விளையாடி [4 சதங்கள் மற்றும் 6 அரைச்சதங்கள்] 919 ஓட்டங்களை குவித்துள்ளார். இது தவிர, 78 பவுண்டரிகளும், 36 சிக்ஸர்களும் குவித்துள்ளார்.
 
இந்நிலையில் விராட் கோலி பற்றி கூறியுள்ள வாசிம் அக்ரம், ”அவருடைய நேர்த்தியான ஆட்டத்தாலேயே விராட் கோலி உச்சத்தை தொட்டுள்ளார். அவர் ரிவர்ஸ் ஷாட் அல்லது லாப் ஷாட் எல்லாம் ஆடுவதை பார்க்க முடியாது. அவர் எப்போதும், புல் ஃபேஸ் ஷாட்டுகள் மூலம் நேர்த்தியாக கிரிக்கெட்டினை ஆடி வருகிறார். அதனாலே அவரால் சீராக செயல்பட முடிகிறது.
 
ஒரு பந்துவீச்சாளராக அவருக்கு நான் பந்துவீச செல்லும் போது வருத்தப்படவே செய்வேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் போது சச்சினுக்கு பந்துவீசுவது கடினமானது. சச்சின், கோஹ்லி இருவருமே, பந்துவீச்சாளர்களுக்கு அவர்களை ஆட்டமிழக்க வாய்ப்பு கொடுப்பதே கடினம்.
 
மிஸ்டர் 360 டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அருமையாக விளையாடுகிறார். அதேபோல சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும்தான். அவர் நிலைமைகளை பரிசீலிப்பதே கிடையாது. அவர் மேட்ச் வின்னர். அவர் தனி ஒரு ஆளாகவே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியை அடுத்து ரோஹித் ஷர்மாவுக்கும் கேலி சித்திரம் வெளியிட்ட ஆஸி ஊடகம்!

ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் விளையாட்டு! - சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம்

ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்தில் அவுட்… தொடரும் கோலியின் பிடிவாதம்!

ஐபிஎல் விளையாடுற பையன்னு சொன்னாங்க… நிதீஷ்குமார் ரெட்டி அளித்த நச் பதில்!

340 டார்கெட்.. ஆனால் 3 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. டிரா செய்ய முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments