Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் விளையாடிய பிறகு ஓய்வு பெற்று விடுவேன் - மிஸ்பா உல்-ஹக் விருப்பம்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2015 (18:27 IST)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அத்துடன் ஓய்வு பெற்று விடுவேன் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “என்னிடமிருந்து கிரிக்கெட் விலகிச்செல்ல நீண்ட தூரம் இல்லை. நான் எனது சொந்த வாழ்க்கைக்குள் செலுத்துவதற்கு முன்பாக, சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடவதற்கு விரும்புகிறேன்.
 
ஆனால் இதை நான் திட்டமிட்டவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்புக் கிடைத்தால், பிறகு முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். எனவே இந்திய தொடர் என்பது கடைசி எனது ஒன்றாக இருக்கும்.
 
மேலும் அவர் கூறுகையில், ”நீங்கள் இரண்டு பக்கங்களிலும் இருந்து இந்த அம்சத்தை பார்க்க முடியும். நான் அதை கடினமான பகுதியாக பற்றி பேச வேண்டும் என்றால், அந்த இடைவெளிகள் கிரிக்கெட் வீரர்களின் ஃபார்மை பாதிக்கும். கிரிக்கெட் வீரர் என்பவர் மூன்று வகையான வடிவங்களிலும் விளையாட வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் ஆண்டு முழுவதிலும் ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
 
ஆனால், நீங்கள் வெறும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மட்டும் இருந்தால், மூன்று வடிவங்களுக்கும் உள்ள இடைவெளியை சமாளிப்பது கடினமாக இருக்கும். உங்களால் உடனடியாக பள்ளத்தில் இருந்து எழுந்திருக்க முடியாது. இது வித்தியாசமான கிரிக்கெட் பகுதி” என்று தெரிவித்துள்ளார்.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பா உல்-ஹக் 8 சதங்கள், 29 அரை சதங்கள் உட்பட 9,138 ரன்கள் குவித்துள்ளார்.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments