Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’உன்னை இழந்து தவிக்கிறேன்’ - பிலிப் ஹியூக்ஸின் இறுதி குறுஞ்செய்தி

’உன்னை இழந்து தவிக்கிறேன்’ - பிலிப் ஹியூக்ஸின் இறுதி குறுஞ்செய்தி
, திங்கள், 8 டிசம்பர் 2014 (17:54 IST)
மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுக்ஸின் கடைசிக் குறுஞ்செய்தியை அவரது உயிர் தோழி மேகன் சிம்சன் வெளியிட்டுள்ளார்.
 

 
பிலிப் ஹியூஸ் மரணமடைவதற்கு இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னர், தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை, பிலிப் ஹியூக்ஸின் உயிர் தோழியான சிம்சன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். பிலிப் ஹியூக்ஸ் கடைசியாக சிம்சனுக்கு ’Love u.. Miss u… Love u.. Miss u…’ என்று குறிப்பிட்டிருந்த செய்தியை அனுப்பியுள்ளார்.
 
இது குறித்து சிம்சன் தெரிவிக்கையில், 'பில் ஹியூக்ஸும் நானும், சிட்னி நகரிலுள்ள ஓர் உணவகத்தில் தான் முதலில் சந்தித்துக் கொண்டோம். முதலில் தன்னை கிரிக்கட் வீரராக இல்லாமல், ஒரு வங்கியில் பணிபுரிபவரைப் போன்றே அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து இருவரும் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம் என்று கூறினார்.
 
webdunia

 
மேலும், ’பிலிப் ஹியூக்ஸ் எந்த நாட்டிற்க்குச் சென்றாலும் அங்கிருந்து என்னுடன் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர், தன் வாழ்நாள் முழுவதும் அதை தன் அருகில் வைத்திருப்பேன் என்று அடிக்கடி தன்னிடம் கூறுவார்’ என்றும் சிம்சன் தெரிவித்தார். 
 
webdunia

 
ஹியூஸின் இறுதிச்சடங்கின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கட் அணியின் தலைவரான மைக்கல் க்ளார்க் தன்னிடம், 'ஹியூஸ் உன்னை எவ்வளவு நேசித்தான் என்று உனக்குத் தெரியும், அது எங்களுக்கும் தெரியும்' என்று கூறியதாகவும் சிம்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil