Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இனி என்னை அஸ்வின் அவுட்டாக்க முடியாது’ - சொல்கிறார் டி வில்லியர்ஸ்

’இனி என்னை அஸ்வின் அவுட்டாக்க முடியாது’ - சொல்கிறார் டி வில்லியர்ஸ்
, சனி, 10 அக்டோபர் 2015 (20:59 IST)
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினால் என்னை அவுட்டாக்க முடியும் என்று நான் நினைக்கவிலை என்று தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஏற்கனவே டி 20 தொடரை இந்திய அணி இழந்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள டி வில்லியர்ஸ், ”எங்களுக்கு மிகவும் சவாலான பயணமாக அமையக்கூடிய இந்த தொடரை நாங்கள் சிறப்பாக தொடங்கியிருக்கிறோம். டி 20 தொடரில் நாங்கள் இந்த மாதிரி விளையாடுவோம் என்று நிறைய பேர் நினைத்திருக்காமாட்டார்கள்.
 
எங்களுக்கு இது சவலாக போய் கொண்டிருக்கிறது. ஆனாலும், நாளைய நடக்கவிருக்கும் போட்டியில், எங்களக்கு கிடைத்துள்ள மிகவும் முக்கியமான முழு சக்தியுடனும், முழுநம்பிக்கையுடன் கட்டமைப்போம்.
 
நாங்கள் இந்த தொடரை கைப்பற்றுவோம். 2006ஆம் ஆண்டு 2-2 என்ற கணக்கில் சமன் செய்தோம். அந்த தொடரில் நான் பங்கேற்றேன். நாங்கள் இந்த தொடரில் வெற்றி விரும்புகிறோம். எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று உலகுக்கு காண்பிக்க விரும்புகிறோம்.
 
நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடப் போகிறோம். டி 20 தொடர் முடிந்துபோன விஷயம். இப்போது ஒரு முழு புதிய கதை தொடரப்போகிறது. இந்திய மீண்டு எழ முயற்சி செய்யும். ஆனால், நாங்கள் தன்னம்பிக்கையுடன் அதனை முறியடிப்போம்.
 
அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று என்னால் கூற முடியும். ஆனால், நடைபெறவுள்ள போட்டிகளில் அஸ்வினால் என்னை அவுட்டாக்க முடியும் என்று நினைக்கவிலை. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் நான் அவரிடம் ஆட்டமிழந்தேன்.
 
நீங்கள் ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராக தொழில்நுட்ப குறைபாடுகளுடன் எதிர்கொள்ளும் போது, நீங்கள் உங்கள் விளையாட்டு குறித்து கவலைப்பட வேண்டி இருக்கும். ஆனால் இந்த கதை அப்படி இல்லை. நான் ஆதிக்கம் செலுத்த நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.
 
கடைசி ஆட்டத்தால் கொஞ்சம் சோம்பேறித்தனமாக விளையாடி விட்டேன். சுழற்பந்துக்கு எதிராக விளையாடியபோது இதுபோன்று நிறைய நடந்தது இல்லை. இதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனாலும் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவர்க்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil