Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பைக்கு கொஞ்ச நாள்தான் இருக்கு… இதெல்லாம் தேவையா? ஜடேஜாவின் காயத்தின் பின்னணி என்ன?

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (14:26 IST)
ஜடேஜா காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றூ நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் பயிற்சியின் போதோ அல்லது விளையாட்டின் போதோ காயம் ஏற்படவில்லையாம். ஸ்கி போர்ட் விளையாட்டில் ஈடுபட்ட போது தவறி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவலில் “ஸ்கை-போர்டில் விளையாட்டில் சாகச மனப்பாண்மையுடன் ஈடுபட்டார்.  இது- பயிற்சி கையேட்டின் ஒரு பகுதியாக இல்லை. அது முற்றிலும் தேவையற்றது. அவர் நழுவி  விழுந்ததில் முழங்காலில் மோசமாக அடிபட்டது. இது அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது." என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments