Webdunia - Bharat's app for daily news and videos

Install App

T-20 World Cup தொடரில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு இவர் தான் சரி- கங்குலி

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:01 IST)
டி-20 கிரிக்கெட் போட்டி  வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதிவரை  நடக்கவுள்ளது.
 
இத்தொடரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து  நடத்த திட்டமிட்டுள்ளது.
 
இது அமெரிக்காவில் விளையாடும் முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடர் என்பதால் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி அமைப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, மொத்தம் 55 போட்டிகள்,9  மைதானங்களில் நடைபெறவுள்ளன.இதில் 6 மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் 3  அமெரிக்காவில் நடைபெறும்.
 
12 அணிகள்  உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்று வாயிலாகத் தேர்வாகின.
 
இந்த நிலையில், இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. 
 
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை கோட்டைவிட்ட இந்தியா இம்முறை இக்கோப்பையை வெல்ல முனைப்பில் உள்ளது.
 
இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோஹித் சர்மா தான் சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
இந்திய டி-20 அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்கும் நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும் என பலரும் கருத்து   கூறிவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments