Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்ஸ்வெல் அதிரடி வான வேடிக்கை… கடைசி பந்தில் ஆஸி த்ரில் வெற்றி!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:10 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஜெய்ஸ்வால்  6 ரன்னுடன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கிஷான் டக் அவுட்டானார்.  ஆனால், ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் அடித்து அசத்தினார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்னும், வர்மா 31 ரன்னும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் 30 ரன்களை இந்திய வீரர்கள் சேர்த்தனர். இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி கடைசி பந்தில் இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றியை தொடங்கியுள்ளது ஆஸி அணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments