அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் கம்பீர் இருக்கமாட்டார்… ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:37 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில்  சமீபத்தில் வெளியான தகவலின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் பணிகள் காரணமாக கம்பீர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த பொறுப்பிலும் இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments