Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி மீண்டும் ஃபாமிற்கு வர என்ன செய்ய வேண்டும்? கங்குலி ஆலோசனை!

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (18:06 IST)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோனி கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.  
 
2 வது போட்டியில் தோனி 58 பந்துகளை சந்தித்து 37 ரன்களும், 3 வது போட்டியில் 66 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் சேர்த்தார். தோனி அதிக ரன்களை வீணடித்தார்.
 
இந்நிலையில் பழையபடி தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். 
 
கங்குலி கூறியதாவது, தோனியால் இப்போதும் பழைய ஆட்டத்தை ஆட முடியும். ஆனால், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். அணி நிர்வாகம் தோனியுடன் அமர்ந்து இது குறித்து பேச வேண்டும். 
 
தோனி ஒரு சிறந்த வீரர். அவரை ரசிகர்கள் ஏளனம் செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது. அவரைப்போல் ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்னை இந்திய அணி மீண்டும் பெருமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments