ரிஷப் பண்ட்டுக்குதான் முன்னுரிமை…. வெளியில் இருந்து வரும் இரைச்சல் முக்கியம் இல்லை – கம்பீர்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (10:14 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அணியில் கம்பீர் சில முடிவுகளை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் முக்கியமான ஒன்றாக இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு ரிஷப் பண்ட்தான் முன்னுரிமை அளிக்கப்படுவார். வெளியில் இருந்து வரும் இரைச்சல்களுக்கு எல்லாம் முக்கியம் கொடுக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். இதனால் சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments