டிராவை நோக்கி நான்காவது டெஸ்ட்… நிலைத்து நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (14:33 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸி அணியும் நிலைத்து நின்று இந்திய அணி பவுலர்களை திணறடித்து வருகின்றனர். இதுவரை ஆஸி அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இன்னும் அரைநாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments