Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புணே அணிக்கு போன தோனி, கூடவே போகும் பிளெமிங்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (18:43 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பிளமிங், சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் பிளமிங் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புணே அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சூதாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு, அந்த இரண்டு அணிகளுக்கும் பதிலாக புணே, ராஜ்கோட் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
 
இதனையடுத்து சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் ஏலம் விடப்பட்டு, புணே, ராஜ்கோட் அணிகள் அவர்களை ஏலத்தில் எடுத்தன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி, அஸ்வின் உள்ளிட்ட 5 வீரர்கள் புணே அணிக்கு ஆட ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங், சென்னை அணியின் கேபடனாக இருந்த தோனி இடம்பெற்றுள்ள புணெ அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments