Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்­திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வதே முதல் பணி - புதிய தலைவர் மனோகர்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (18:22 IST)
இரண்டு மாதத்தில் இந்­திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வேன் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலை­வ­ராக தேர்வு செய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.
 

 
இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு வாரியத்தின் தலை­வ­ராக இருந்த ஜக்மோகன் டால்­மியா கடந்த 20ஆம் தேதி மர­ண­ம­டைந்தார். இதனை தொ­டர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலை­வரை தேர்ந்து எடுப்பதற்­காக சிறப்பு பொதுக்­குழு கூட்டம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடைபெற்றது.
 
இந்த கூட்­டத்தில் இந்­திய கிரிக்கெட் சபையின் புதிய தலை­வ­ராக ஷசாங் மனோகர் ஒரு­மனதாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். நாக்­பூரை சேர்ந்த ஷசாங் மனோகர் தற்­போது இரண்டா­வது முறை­யாக கிரிக்கெட் வாரியத்தின் தலை­வ­ரா­கிறார்.
 
இதற்கு முன்­ன­தாக, 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலை­வ­ராக பணி­யாற்­றி­ உள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
 
பத­வி­யேற்ற பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய மனோகர் “என்னுடைய முதல் நட­வ­டிக்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள தவறான பிம்­பத்தை மாற்றி, ரசி­கர்­க­ளிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்­ப­டுத்­து­வது தான்.
 
என்­னு­டைய திட்­டங்­களை அமுல்­ப­டுத்தி கிரிக்கெட் வாரியத்தை தூய்மைப்­ப­டுத்த இரண்டு மாதம் அவ­காசம் கேட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு பிறகு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

Show comments