Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோத்தாலும் கம்பீரமாக தோற்று போகணும்! – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (13:52 IST)
இன்று உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் தோற்றாலும் கம்பீரமாக தோற்க வேண்டும் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை ஒவ்வொரு அணிகளும் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஐந்து போட்டிகளிலுமே வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இந்த போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று தர வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந் நிலையில் இன்று தனது ஐந்தாவதுப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து. கடந்த 1999 க்கு பிறகு இங்கிலாந்து அணி இலங்கையை உலகக் கோப்பை போட்டிகளில் வெல்லவில்லை. இதனால் இன்று நடைபெறும் இந்தப் போட்டிகளில் இலங்கையை இங்கிலாந்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இங்கிலாந்தின் இந்த உலக கோப்பையின் மோசமான ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி “நாங்கள் தோற்றாலும் இத்தனை ஆண்டுகளாக எப்படி விளையாடினோமோ அதே கம்பீரத்துடன் தோற்க விரும்புகிறோம். முன்னர் விளையாடியதைப் போல நாங்கள் விளையாடினால் பல அணிகளை தோற்கடித்து இருப்போம். இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் இந்த முறையில் எந்த அர்த்தமும் இல்லை. இப்படியே இது தொடர்ந்தால் நாடு திரும்பும்போது வருத்தத்துடன் தான் செல்லவேண்டியிருக்கும்“ என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments