Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இந்தியாவுக்காக ஆடுவது டவுட் தான்... ஹர்பஜன்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:48 IST)
தோனி இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என சக வீரரான ஹர்பஜன் சிங் பேட்டி அளித்துள்ளார். 
 
பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காத தோனி ஒப்பந்த பட்டியலிலும் இடம்பெறாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பேசப்படுகிறது. 
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டுமே தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என பேட்டியளித்துள்ளார். 
 
ஆனால் பிசிசிஐ தரப்பில், தோனியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், உலகக் கோப்பை போட்டியின் போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட தோனி, அதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு எந்தவொரு தகவலும் சொல்லவில்லை. அதோடு ராணுவத்தில் இரண்டு மாதங்களாக பணியாற்ற சென்றுவிட்டார். இதனால் தான் தோனியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments