நான் சென்னை பையன்… சி எஸ் கே வில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி – தினேஷ் கார்த்திக்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:27 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சி எஸ் கே வில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற எல்லோரையும் ஏலத்தில் விட்டுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஏலம் வீரர்களையும் அணிகளையும் மாற்ற உள்ளது.

இதில் சென்னையைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து பேசியுள்ளார். இதுவரை மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் ‘நான் சென்னையைச் சேர்ந்தவன். அதனால் சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments