Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோனி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (19:32 IST)
ஒவ்வொரு பெண்கள் அல்லது சிறுமிகளை காப்பது நமது கடமை என்று இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
 

 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை வைத்து பெண்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்றை எடுத்துள்ளது.
 
அந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியை தோனி தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு பெண்கள் அல்லது சிறுமிகளை காப்பது நமது கடமை என்றும் தோனி வீடியோ பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்.
 
இந்த வீடியோ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி, அம்பதி ராயுடு ஆகியோரை வைத்தும் அந்த நிறுவனம் விழிப்புணர்வு வீடியோ எடுத்திருந்தது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments