Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜா.. நான் தோத்தாலும்.. நீ ஜெயிச்சுட்ட! – மனதார வாழ்த்திய டேவிட் வார்னர்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (14:04 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டியில் இந்தியா வென்ற நிலையில் தனது அணி தோல்வியையும் பொருட்படுத்தாது நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டேவிட் வார்னர்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நிலையில் நடந்து முடிந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மூன்று டி20 ஆட்டங்களிலும் தமிழக வீரர் நடராஜன் வீழ்த்திய விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் தொடர்ந்து நடராஜன் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

இந்நிலையில் நடராஜனின் ஐபிஎல் அணி கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “வெற்றியோ, தோல்வியோ அல்லது இரண்டும் இல்லையோ மைதானத்தில் சக வீரருக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். இந்த சிரிஸில் எங்கள் அணி தோல்வியடைந்திருந்தாலும், நடராஜனின் பண்பையும், விளையாட்டின் மீது அவர் கொண்டுள்ள காதலையும் கண்டு மகிழ்கிறேன். இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் ஒருநாள்\டி20ல் நீ சாதித்திருக்கிறாய். வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments