இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன்: டேவிட் வார்னர் உருக்கம்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (15:54 IST)
ஆஸ்திரேலிய அணிக்காக ஓராண்டு தடை முடிந்த பிறகும் விளையாட மாட்டேன் என டேவிட் வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். 
 
இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது.
 
இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க தான் செய்த தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து டேவிட் வார்னர் ரசிகர்களிடம் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது;- 
 
”ஆஸ்திரேலியாவை மோசமான நிலைமையில் கீழே விழ வைத்துவிட்டேன். எனது தவறான செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன். நான் நேசித்த ஆஸ்திரேலியா அணிக்காக நான் விளையாட  போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது. நாட்டு மக்களிடமும் எனது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments