Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:58 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எப்படியோ இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று, கோப்பையை இழந்தது. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா “கோலியின் தலைமையில் இந்தியா, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்ததும், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அணிக்கு தேவையான இடத்தில் விளையாடி கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால் பாபர் அசாம், அணிக்காக தனது இடத்தை மாற்றிக்கொண்டு நடுவரிசையில் இறங்க மறுக்கிறார். ஏனென்றால் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாட தெரியாது. அவருடைய பிடிவாதம் அணிக்கு ஆபத்தாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments