Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: சூதாட்ட தரகர்களின் புதிய யுக்தி - வீரர்களை கவர அழகிகள்

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2014 (15:55 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத் தரகர்கள், வீரர்களை கவர்வதற்காக அழகிகளை வைத்து முயற்சி செய்கின்றனர் என நியூசிலாந்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  2015  பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கி மார்ச் 20, 2015 வரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கவுள்ளது.
 
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலர் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகப் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் உலகக்கோப்பையில் சூதாட்டத்தில் ஈடுபட சூதாட்ட தரகர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீரர்களை கவர்வதற்காக அழகிகளை வைத்து முயற்சிக்கத் திட்டமிட்டுள்ளதாக நியூசிலாந்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து தெரிவித்த நியூசிலாந்து காவல்துறையினர், சூதாட்ட தரகர்களின் செயல்களைத் தடுப்பதற்கு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும், இதை மீறி எந்த தவறுகளும் நடக்காமல் இருக்க வீரர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments