Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து தோல்வி எதிரொலி - கேப்டன் பதவியில் இருந்து விலக மாட்டேன்: குக்

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2014 (11:01 IST)
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்திருக்கிறார்.
 
ஒரு நாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. மேலும் 24 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி ஒரு நாள் தொடரை வெல்வது, இதுவே முதல் முறையாகும்.
 
தொடர்சியாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சொதப்பி வருவதே இவ்வகையான சர்ச்சைகளுக்குக் காரணமாகும். இதனால் பல்வேறு தரப்பிலிருந்து கேப்டன் குக்கிற்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
 
ஆனால் இதெற்கெல்லாம் சற்றும் செவிச்சாய்க்காமல்  இங்கிலாந்து  கேப்டன் குக்  உறுதியாக உள்ளார். மேலும் நிருபர்கள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வீர்களா? என்று கேட்டதற்க்கு ' பதவி விலக மாட்டேன் ’ என்று கூறியுள்ளார். தேர்வு குழு விஷயத்தில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்
 
அதிக ஒரு நாள் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் தோனி கூறுகையில் விளையாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். மேலும் இப்போது இருக்கும் இளம் வீரர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

Show comments