Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் காதலி மற்றும் மனைவியை அழைத்துச் செல்ல தடை - பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (18:11 IST)
இலங்கைக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் காதலி மனைவியை அழைத்துச் செல்ல தடைவிதித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

 
வங்கதேச சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, 15 பேர் கொண்ட விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 4ஆம் தேதி இலங்கை புறப்பட்டு செல்கிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
 
முதல் போட்டி ஆகஸ்ட் 12 - 16 தேதிகளிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 20 - 24 தேதிகளிலும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 1 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருடன் இலங்கை வீரர் குமார் சங்ககரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் தங்களது மனைவி, காதலிகளை அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
 
இது பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த தொடரில் விளையாடவுள்ள பெரும்பாலான வீரர்கள் ஒரு மாத காலத்திற்கு மேலாக தங்களது குடும்பத்தினருடன் போதுமான அளவு நேரத்தை செலவழித்து விட்ட பிறகுதான் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால் நாங்கள், வீரர்கள் தங்களது மனைவியை அழைத்து வர அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments